எந்தன் வெறுமையான இதயத்துக்குள்ளும்
காதலென்னும் பூக்களை வீசியவள்....
தனிமை படர்ந்த நொடிகளை எல்லாம்
தன் குரல்என்னும் இசைதந்து நிரப்பியவள்....
சமூகத் தீயால் என் வாழ்தல் சாய்க்கப்படுகையில்
மடிதந்து என் மனக் காயம்நீக்கி ஊ (தூ) க்குவித்தவள்...
பாசக்கார பார்வைகளால் நோகாமல் என்னை
கொலைசெய்து கொன்று போட்டவள்...
காதலை எனக்கு கற்றுத் தந்தவள்...
தனிமையைக் கூட சுகமாக்கியவள்...
உணர்ச்சிகளை உணர வைத்தவள்...
என் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியாகியவள்...
இருந்தும்....
மரணம் எனக்கு மாலையிடப் போகிறதை தெரிந்து
காண முன்னே தன்னை தீக்கு இரையாக்கியவள்
என்னையும் நடைபிணமாக்கி விட்டவள்...
பிரிந்தும் என் நெஞ்சுக்குள்ளே வாழ்கின்றவள்
அவளே என் காதல் தேசத்தி ஜனாதிபதி...!!